Tamilnadu
60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதி - கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவியும் உயிரிழப்பு!
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துச்சாமி - ஐயம்மாள் தம்பதி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அவர் வீட்டில் இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முத்துச்சாமிக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் பாதிக்கப்பட்டிருந்தார். அவ்வபோது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீட்டில் தீவிர மோசமான நிலையில் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று முத்துச்சாமி வயது மூப்புக்காரனமாக பரிதாப உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது மனைவி, தனது கணவர் உயிரிழந்த சோகத்தில் மூழ்கினார். தொடர்ந்து அழுதுகொண்டிருந்த ஐயம்மாள் திடீரென கணவர் உடல் மேல் சாய்ந்து மயங்கி விழுந்தார்.
மயங்கிய ஐயம்மாளை அருகில் இருந்த மகன் எழுப்ப முயன்றபோது, அவரும் உயிரிழந்துள்ளார். பின்னர் கணவன் மனைவி இருவருக்கும் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட ஊர்வலமாகச் சென்ற பின்னர் ஒரே தகன மேடையில் எரியுட்டப்பட்டனர். 60 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த கணவனின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் மனைவி உயிரிழந்த சம்பவம் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“எடப்பாடி TO சென்னை TO டெல்லி... இதுதான் பழனிசாமியின் கடந்த 5 ஆண்டு பணியாக இருந்தது..” - கனிமொழி எம்.பி!
-
“திராவிட மாடல் அரசின் சாதனைகளை விட நீளமானது பழனிசாமியின் துரோகப் பட்டியல்”: முதலமைச்சர் கடும் விமர்சனம்!
-
”தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மாற்றம்.. அதிகார அத்துமீறலில் தேர்தல் ஆணையம்” : முதலமைச்சர் கடும் கண்டனம்!
-
தமிழ்நாட்டிற்கு வந்து மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க முதலமைச்சர் : தமிழச்சி தங்கபாண்டியன் MP ஆவேசம்!
-
தொகுதி மறுவரையறை ஆபத்து: தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!