Tamilnadu
முத்தமிழறிஞர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள்: அமைதிபேரணி முதல் கோபாலபுரம் வரை.. முதலமைச்சர் மரியாதை!
முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பின்னர் அங்கிருந்து முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த அமைதிப் பேரணியில், நாடாளுன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான கழக தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனையடுத்து மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அண்ணா அறிவாலயத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், பெண்களுக்கு தையல் மிஷின், இஸ்திரி பெட்டி, திருநங்கைகளுக்கு ரூ. 10 ஆயிரம் உதவித் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையடுத்து சி.ஐ.டி காலனியில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அங்கு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் கோபாலபுரத்தில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வுகளில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், தி.மு.க பொருளாளரும், அமைச்சருமான துரை முருகன், தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ, தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., தி.மு.க எம்.பி.க்கள் தயாநிதி மாறன், உள்ளிட்டோரும் கலைஞர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!