Tamilnadu

"பொய் மட்டுமே பேசி வருவது பழனிசாமிக்கு அழகல்ல".. அமைச்சர் சக்கரபாணி பதிலடி!

சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், "தமிழ்நாட்டு எல்லையில் வருகின்ற மாவட்டங்களில் பிற மாநிலங்களுக்குத் தருவதற்கு ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதற்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ரேஷன் அரசி கடத்துப்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தஞ்சாவூரில் அதிக மழை பெய்த காரணமாக 5000 நெல் மூடை நனைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருக்கிறார். அது முற்றிலும் தவறான செய்தி. இது அவரது வகிக்கும் பதவிக்கு அழகல்ல. மேலும் தொடர்ந்து தவறான தகவல்களை அறிக்கையாக வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியது.

தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை12 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கி உள்ளோம். 2.5 லட்சம் போலி ரேசன் கார்டு நீக்கப்பட்டுள்ளது 12 லட்சத்து 50 ஆயிரம் பெயர்கள் அவர்கள் உயிரிழந்ததையடுத்து குடும்ப அட்டையிலிருந்து அவர்களது பெயர் நீக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டு அ.தி.மு.க ஆட்சி காலத்தில் நெல்லுக்கான கட்டப்பட்ட செமிப்பு குடோன் தஞ்சாவூர் மாவட்டத்தில் வெறும் 10000 மெட்ரிக் டன் கொள்ளளவுக்குக் கட்டியுள்ளனர். தற்போது அங்கே சாலை, மின் இணைப்பு வசதி செய்வதற்காக ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து குடோன்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நெல்லை சேமித்து வைக்க எந்த இடத்திலும் புதிய குடோன்கள் அமைக்கவில்லை. ஆனால் தி.மு.க ஆட்சி அமைத்த 14 மாதங்களில் பல்வேறு இடங்களில் குடோன் அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது ஊழல் குற்றச்சாட்டு மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கண்டிப்பாகத் தவறு செய்தாலும் சட்டத்துக்கு முன்னும் அனைவருக்கும் சமம் கண்டிப்பாகச் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “உங்களுக்கு முன்பே குறைத்துவிட்டோம்.. இதுதான் உண்மை நிலவரம்” : நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த PTR