Tamilnadu
திடீரென்று பற்றி எரிந்த பைக்.. சம்பவ இடத்திலேயே முதியவர் உடல் கருகி பரிதாப பலி !
புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். 65 வயதுடைய முதியவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். நெல் வியாபாரியான இவர், வியாபாரம் நிமித்தமாக தனது இருசக்கர வாகனத்தில் வெளியில் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று வேணுகோபால் அபிஷேகப்பாக்கம் என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தின் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவர் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென தீ பற்றிக்கொண்டது. இது எப்படி ஆனது என்று அவர் யோசித்து சுதாரிப்பதற்குள், தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது.
இதில் பதற்றமடைந்த அவர், வாகனத்தை விட்டு இறங்க முயற்சித்துள்ளார். ஆனால் பதட்டத்தில், கால் தவறி அவர் கீழே விழ, அவர் மீது வாகனம் விழ, வாகனத்துடன் சேர்ந்து அவரும் தீயில் கருகி பரிதாபக பலியானார். வாகனம் தீப்பிடித்து எரிவதை கண்ட வழிப்போக்கர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கருகி கிடந்த வேணுகோபாலின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடம் ஒரு ஆள்நடமாட்டம் இல்லாத காட்டு பகுதி என்பதால், இது விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தின் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!