Tamilnadu

“தமிழர் உலகில் எங்கு அவதிப்பட்டாலும் தமிழினம் வேடிக்கை பார்க்காது..” : கனிமொழி எம்.பி. பேச்சு!

இலங்கைக்கு நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து கனிமொழி எம்.பி உரையாற்றினார். அப்போது பேசிய கனிமொழி எம்.பி., “பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான நோக்கத்துடன் உதவும் வகையில் ரூ.123 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப ஒன்றிய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி சென்னையை தொடர்ந்து 2-ஆம் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து ஏற்கனவே நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3-வது முறையாக நேற்று தூத்துக்குடியில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.

ரூ.123 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரைரூ.174 கோடிக்கு அதி கமானநிவாரணப்பொருட் கன் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழர்கள் உலகில் எந்த மூலையில் அவதிப்பட்டாலும் தமிழினம் வேடிக்கை பார்க்காது. தந்தை பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: "வருமான வரித்துறையை குறைசொல்ல தெம்பில்லாமல் திமுக மீது சீறுகிறார்".. பழனிசாமி மீது ஆர்.எஸ்.பாரதி தாக்கு!