Tamilnadu
வங்கி மேனேஜர் கொடுத்த பகீர் புகார்.. கார் லோன் வாங்கி நூதன மோசடி.. 2 பேரை கைது செய்து போலிஸ் விசாரணை!
கரூர் மாவட்டம் பள்ளபட்டியில் ஒரு வங்கியின் கிளை உள்ளது. அதன் மேலாளர் வினோத்குமார். அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ஹபீப் ரகுமான் (41). பேன்சி ஸ்டோர் வியாபாரம் செய்து வருகிறார். கிருஷ்ணவேல் ( 36) ஒரு கார் விற்பனை நிலையத்தில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் வங்கி மேலாளர் வினோத்குமார் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப்புகாரில், ஹபீப் ரகுமான் தங்களது வங்கியில் 4 சக்கர வாகன கடன் ரூ 4 லட்சத்து 47 ஆயிரம் வாங்கி, கிருஷ்ணவேல் உதவியுடன் கார் வாங்கினார்.
கடன்தொகை திரும்ப செலுத்தி வந்தார். கடன்தொகை நிலுவையில் உள்ள நிலையில் ஹபீப் ரகுமானும் கிருஷ்ணவேலும் வங்கி மேலாளரின் கையெழுத்தை போட்டு, அரவக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சான்றிதழ் கொடுத்து மோசடி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த புகாரின்பேரில் போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். ஹபீப் ரகுமான், கிருஷ்ணவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !