Tamilnadu
காரில் இருந்து வீசிய துர்நாற்றம்.. கதவைத் திறந்ததும் ஷாக்கான போலிஸார்: நடந்தது என்ன?
நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித். பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்யா. இந்த தம்பதிக்கு பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 21ம் தேதி கோவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு ரஞ்சித் காரில் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் வீட்டிற்குத் திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து ஊட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த காரில் துர்நாற்றம் வீசுவதாக போலிஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் காரின் கதவை திறந்து பார்த்தபோது உயிரிழந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை செய்தபோது அது ரஞ்சித் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக ரஞ்சித் உடலை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் ரஞ்சித் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது கொலை செய்தார்களா?, காரின் ஏ.சி-யால் மரணமடைந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!