Tamilnadu
15 திருமணம்.. 2 கொலை.. 8 ஆண்டுகள் தலைமறைவு : கொலையாளியை சிக்க வைத்த சிக்கன் பக்கோடா : சிக்கியது எப்படி?
சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குணசுந்தரி. கணவனை இழந்த இவருக்கு 7 வயதில் மகன் ஒருவருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2014ம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவருக்கு ஏற்பட்ட கருத்துவேறு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாகவும், இதில் ஒரு கட்டத்தில் சுந்தரிமீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.
பின்னர் போலிஸார் வழக்குப்பதிவுசெய்து குற்றவாளி ராஜாதான் என்பதனை உறுதி செய்தனர். மேலும் புதுவண்ணாரப்பேட்டை போலிஸார் தனிப்படை அமைத்து ராஜாவைத் தேடிவந்தனர். ஆனால் கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜா, தலைமறைவாக இருந்து வந்தார். இதனிடையே தொடர்ந்து நடத்தி வந்த விசாரணையில் ராஜா சுந்தரி உட்பட 15 பேரை ஏமாற்றி திருமணம் செய்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள ஒரு சிக்கன் பக்கோடா கடைக்கு ராஜா அடிக்கடி வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மாறுவேடத்தில் சென்ற போலிஸார் , 8 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளியான ராஜாவை சுற்றிவளைத்து கைது செய்தனர். போலிஸார் ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சரின் தீர்மானம் - “இதெல்லாம் ஆர்.என்.ரவிக்கு உறைக்குமா ?” :ஆளுநரை வெளுத்து வாங்கிய ‘முரசொலி’ !
-
”இடஒதுக்கீடு கொள்கையின் பிதாமகன் தமிழ்நாடு” : சட்டப்பேரவையில் அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
”இன்ஸ்டா ரீல்ஸ் அரசியல் செய்யும் பழனிசாமி” : அமைச்சர் சிவசங்கர் பதிலடி!
-
தமிழ்நாட்டை தண்டிப்பது ஏன்? : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு 10 கேள்விகளை எழுப்பிய அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
BLINKIT வணிக தளத்தில் ‘கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகள்!’ : முழு விவரம் உள்ளே!