Tamilnadu

ஜெயக்குமார் மகள் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து - மேலும் ஒருவர் பரிதாப பலி!

கும்மிடிப்பூண்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் திருமண மண்டபத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து உணவு பரிமாற வந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சீத்தல் உயிரிழந்ததை நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த விக்னேஷ் என்பர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியாவிற்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கடந்தவாரம் ஆந்திராவை சேர்ந்த மணமகனுக்கும், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நடைபெற்றது.

அப்போது முதல் தளத்தில் உணவு பரிமாறுவதற்கு கீழ் தளத்திலிருந்து உணவு எடுத்து சென்றபோது லிஃப்ட் அறுந்து விழுந்ததில் கேட்டரிங் பணிகளுக்காக உணவு பரிமாற வந்த காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சீத்தல் தலை நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் லிப்ட்டில் சென்ற விக்னேஷ், ஜெயராமன் ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருமண மண்டப உரிமையாளர் ஜெயப்பிரியா தலைமறைவான நிலையில் ஊழியர்கள் மூவரை போலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட திருமண மண்டபத்தின் மேலாளர் திருநாவுக்கரசு, மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 3 பேரை சிப்காட் காவல் காவல்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து திருமண மண்டப ஊழியர்கள் மூவரையும் சிப்காட் காவல்துறையினர் பொன்னேரி கிளைச்சிறையில் அடைத்தனர். இந்த விபத்தில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருமண மண்டபத்தின் உரிமையாளரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்ரியா தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: வேலைதேடும் இளைஞர்களே குறி: ஸ்கெட்ச்போட்டு 60 பேரிடம் ரூ.3 கோடி சுருட்டல்: மோசடி பேர்வழி சிக்கியது எப்படி?