Tamilnadu
ஜூஸ் கடை→அடகு கடை: சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் நகைகள் அபேஸ்.. காட்பாடி அருகே மர்ம கும்பல் கைவரிசை!
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள சேர்க்காடு கூட்ரோட்டில் மேல்பாடியை சேர்ந்த அனில்குமார். இவருக்கு சொந்தமான நகை அடகு கடை அதே பகுதியில் உள்ளது.
நேற்று வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு சென்றவர் இன்று மீண்டும் கடையை திறக்க வந்த போது மர்ம நபர்கள் அடகு கடைக்கு பக்கத்தில் உள்ள ஜூஸ் கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று அடகு கடையின் சுவற்றை உடைத்து உள்ளே இருந்த சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனி, ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை தொடர்பாக திருவலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஆட்கள் நடமாட்டமுள்ள சாலையில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு ஒரு தகவலையும் செய்தியாளர்களுக்கு ஒரு தகவலையும் கடையின் உரிமையாளர் கூறியிருக்கிறாராம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்று இதே நபரின் கடை மேல் மாடியில் திருடு போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!