Tamilnadu
பேரறிவாளன் விடுதலை: அனல் தெறிக்க வாதம்.. சொன்னதை செய்து காட்டிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர் சிரைத் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாகத் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கும், ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக 2016ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரைக் கட்டாயம் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை தி.மு.க மேற்கொள்ளும் என வாக்குறுதி அளித்தார்.
இதையடுத்து முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஆளுநரைச் சந்தித்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தினார். பின்னர் பேரறிவாளனுக்குத் தொடர்ச்சியாக தி.மு.க அரசு பரோல் கொடுத்து வந்தது. இதற்கிடையில் உச்ச நீதிமன்றமும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியது.
இதற்கிடையில் தி.மு.க அரசு பேரறிவாளன் விடுலை குறித்து சட்டப்போராட்டத்தை தொடர்ச்சியாக நடத்தி வந்தது. இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை வழக்கில், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி முடிவு எடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார் என தமிழ்நாடு அரசு தனது வாதங்களை அழுத்தமாக முன்வைத்து வந்தது.
இந்நிலையில் இன்று ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு என கூறு பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் சொன்னதை போலவே செய்து காட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!