Tamilnadu
குளத்தில் மூழ்கிய மகள்கள்.. தன் உயிரை கொடுத்து 2 மகள்களை காப்பாற்றிய தாய்: நெஞ்சை உலுக்கிய சோகச் சம்பவம்!
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட வாழைக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வின்சன்ட். இவரது மனைவி ஸ்டெல்லா. இந்த தம்பதிக்கு பெனினால், வின்சி என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஸ்டெல்லா தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு கிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது கரையில் நின்றிருந்த பெனினால் குளத்தில் இறங்கியபோது நீரில் மூழ்கியுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சி, தனது தங்கையை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
பிறகு, மகள்கள் இருவரும் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்த ஸ்டெல்லா உடனே இரண்டு மக்ளையும் மீட்டு முயற்சி செய்துள்ளார். இதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்தஉடன், குளத்தில் இறங்கி இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். பிறகு ஸ்டெல்லாவை மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்டெல்லா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கிய இரண்டு மகள்களைக் காப்பாற்றி விட்டு தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
மோசமான தேசிய நெடுஞ்சாலைகளால் அதிகரிக்கும் விபத்துகள் : நாடாளுமன்றத்தில் திமுக MP-க்கள் குற்றச்சாட்டு!
-
கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களுக்குத் துணை போவது வெட்கக்கேடு : பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
-
மதக் கலவரத்தைத் தூண்டுவதா? - உயர்நீதிமன்ற நீதிபதியே துணை போவதா? : ஆசிரியர் கி.வீரமணி ஆவேசம்!
-
தமிழ்நாட்டை வஞ்சிக்கிற போக்கு தொடருமேயானால்... : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!
-
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது இம்பீச்மெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்