Tamilnadu
பெற்ற 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தாய்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை!
புதுக்கோட்டை மாவட்டம், கருப்பர்கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன் அடைக்கன். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு ஜெகதீசன் என்ற 2 வயது மகனும், தர்ஷினியா என்ற 9 மாதக் குழந்தையும் இருந்தனர்.
பொன் அடைக்கன் கோயம்புத்தூரில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் எப்போது ஊருக்கு வந்தாலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கு பொன் அடைக்கனின் குடிபழக்கமே காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்த பொன் அடைக்கனுக்கும் அவரது மனைவி பஞ்சவர்ணத்திற்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி பஞ்சவர்ணம் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
இதனால், தனது இரண்டு குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு தொலைபேசியில் இது குறித்து தனது பெற்றோருக்குப் தெரிவித்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பஞ்சவர்ணம் தெரிவித்துள்ளார். பிறகு இறந்த குழந்தைகளின் உடலை மடியில் வைத்து பித்துப் பிடித்தவர் போல் அமர்ந்திருக்கிறார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் குழந்தைகளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து, பஞ்சவர்ணத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்ற தாயே 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகை... சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கிய மேயர் பிரியா !
-
120- க்கும் மேற்பட்ட தொலைந்த மொபைல் போன்களை மீட்டெடுத்த ரயில்வே துறை... சாத்தியமானது எப்படி ?
-
"SIR குறித்து மக்கள் ஏமாந்துவிடாமல் எச்சரிக்கை மணியடிப்பது மிகமிகத் தேவை" - தி.க தலைவர் கி.வீரமணி !
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!