Tamilnadu
ஆற்றில் குளிக்கச் சென்றவர் சேற்றில் சிக்கி பலி.. திருவள்ளூர் அருகே நடந்த சோகம்!
ஆரணியில் ஆற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் சேற்றில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு (38). எலக்ட்ரீசியனாக கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், அன்பு நேற்று நண்பர்களுடன் பெரியபாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அன்பு சேற்றில் சிக்கி ஆழத்திற்கு சென்றுள்ளார். இதனைக்கண்ட அவரது நண்பர்கள் பெரியபாளையம் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் போலிஸார் மற்றும் தேர்வாய் சிப்காட் தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி அன்புவை சடலமாக மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர், பெரியபாளையம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகும்” - எல்.கே. சுதீஷ் எம்.பி பேட்டி!
-
7 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு.. அதிமுக ஆட்சி ஊழல் நாற்றம் எடுத்த ஆட்சி: முரசொலி கடும் தாக்கு!
-
திராவிட மாடல் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டால் இந்தியா விரைவாக வளர்வது உறுதி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”பவளவிழா கண்ட தி.மு.க பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
”தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: அமைச்சர் தா.மோ.அன்பரசன் புகழாரம்!