Tamilnadu

கோழிக்கறியில் வெடிமருந்து தடவி விலங்குகளை வேட்டையாட முயற்சி: வனத்துறையிடம் இருவர் வசமாக சிக்கியது எப்படி?

கோழி இறைச்சியில் வெடிமருந்து தடவி வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற ஒருவர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம்.

திருவண்ணாமலை அடுத்த சொரகுளத்தூர் காப்புக்காட்டில் இரவு நேரங்களில் மான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு விற்கப்படுவதாக வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.

அதன்படி, திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் சீனிவாசன் தலைமையில் நேற்று இரவு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கோழி இறைச்சியில் வெடிமருந்து தடவி வனவிலங்குகளை வேட்டையாட தயாராக இருந்த கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராமு மற்றும் ஜான்சன் ஆகியோரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயற்சித்த போது ஜான்சன் என்ற நபர் தப்பி ஓடி அங்கிருந்த காட்டுப்பகுதிக்குள் மறைந்தார்.

பின்னர் ராமுவை கைது செய்த வனத்துறையினர், வேட்டையாட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன் தப்பி ஓடிய ஜான்சனை தீவிரமாக தேடியும் வருகின்றனர்.

Also Read: கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த கேரள அரசு பேருந்து; 10 பேருக்கு காயம்.. நாகர்கோவில் அருகே பரிதாபம்