Tamilnadu

இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் #1YearOfCMStalin: திராவிட ஆட்சியை போற்றும் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகாள் அ.தி.மு.க அரசில் மக்கள் கடும் துயரங்களை சந்தித்தனர். பிறகு 2021 ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டுத் தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் தி.மு.க தலையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து மே 7ம் தேதி முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நொடியிலிருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதைச் செயல்படுத்தியும் வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி ட்விட்டரில் #1YearOfCMStalin என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தி.மு.க அரசின் ஓராண்டில் நூற்றாண்டைக் காணும் வரலாற்றுச் சாதனைகளை பொதுமக்கள் பட்டியலிட்டி தி.மு.க அரசுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது, பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தது, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் தள்ளுபடி, 14 லட்சம் பேரின் கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என தி.மு.க அரசின் சாதனை சமூக வலைதளத்தில் பொதுமக்கள் பட்டியலிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அளவில் #1YearOfCMStalin என்ற ஹேஷ்டே ட்விட்டரில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ தமிழ்நாடு நிமிர்ந்த நாள் மே 7- இனியெல்லாம் இவர் ஆண்டே: முரசொலி