Tamilnadu
சக நண்பர்கள் கண்முன்னே நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவன்.. ஏரிக்கு சென்ற இடத்தில் நடந்த சோகம்!
சென்னை தாம்பரம் அடுத்த கோவிலாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடய மனைவி ரங்கனாயகி. இவர்களுக்கு சூர்யா என்ற மகன் உள்ளார். சூர்யா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பள்ளி விடுமுறை என்பதால், தனது நண்பர்களுடன் சேர்ந்து அருகில் உள்ள ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது சூர்யா ஆழமான பகுதியில் குளிக்க சென்றதால் நீரில் மூழ்கினார்.
இதனை கண்ட சகநண்பர்கள் கூச்சலிட்டதால் சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதி மக்கள் தீயனைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி ஏரியில் இறந்த நிலையில் இருந்த சூர்யாவின் உடலை மீட்டனர்.
தகவல் அறிந்து வந்த சேலையூர் போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குஜராத் நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் உறுப்பினர் எதிர்ப்பு... காரணம் என்ன ?
-
உங்களுடன் ஸ்டாலின் : மனுக்களை அளிக்க வந்த பொதுமக்கள்... கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு - அமைச்சர் தா.மோ.அன்பரசன் !
-
பள்ளி கல்விக்கு முன்னுரிமை கொடுக்கும் அரசு... முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் குறிக்கோள் இதுவே!
-
சென்னை மெட்ரோ இரயில் : பூந்தமல்லி To போரூர் வழித்தடத்தில் சோதனைகள் நிறைவு !