Tamilnadu
மளிகை கடை ஷட்டரை உடைத்து அரிசி,பருப்பை காலி செய்த காட்டு யானைகள்: நாய்களை தடுத்து நிறுத்திய தடாகம் மக்கள்
கோவை மாவட்டம் தடாகம் அருகே மளிகை கடை ஷட்டரை உடைத்து உணவு பொருட்களை சாப்பிட காட்டு யானை கூட்டத்தால் அதிர்ச்சியடைந்த மக்கள்.
கோவை மாவட்டம், பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 7 காட்டு யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இன்று அதிகாலை தண்ணீர் பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன.
அதில், 3 யானைகள் அப்பகுதியில் இருந்த மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டன.
இதனைக் கண்ட தடாகம் பகுதி மக்கள் காட்டு யானைகளுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். மேலும் யானைகளை கண்டு அஞ்சிய நாய்களையும் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனிடையே, யானைகள் மளிகை கடை ஷட்டரை உடைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சாப்பிடுவதை அப்பகுதி வாசிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். அந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
ரூ.110.92 கோடியில் துணைமின் நிலையம் : கொளத்தூரில் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.2000 கோடி முதலீடு - 3000 பேருக்கு வேலை : Hitachi நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“ஒன்றிய அரசின் மனிதத்தன்மையற்ற செயல்” : புதிய EPFO விதிகளுக்கு கனிமொழி MP எதிர்ப்பு!
-
மக்களே உஷார் : தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - வானிலை அப்டேட் இதோ!