Tamilnadu
நடைபயிற்சியின்போது தொழிலதிபரை கடத்திய கும்பல்.. 3 மணி நேரத்தில் மீட்ட வத்தலகுண்டு போலிஸ் - 7 பேர் கைது!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் அன்புச்செழியன். இவர் பெரியகுளம் சாலையில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். சில நாட்களாக இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை நடைபயிற்சியில் இருந்தபோது மர்ம நபர்கள் சிலர் அன்புச்செழியனைக் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலிஸார் அப்பகுதியில் ஆய்வு செய்து, கடத்தல்காரர்களைக் கைது செய்ய உடனே தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர். அப்போது மதுரை காரியாபட்டியில் உள்ள ஒரு வீட்டில் அன்புச்செழியன் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
உடனே அங்கு சென்ற போலிஸார் கடத்தல்காரர்களிடம் இருந்து அன்புச்செழியனை மீட்டனர். பிறகு கடத்தலில் ஈடுபட்ட வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, சிவா, பிரபாகரன், வடிவேல், மணி ஆகியோரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
இதில் தொழில் போட்டி காரணமாக வெள்ளைச்சாமி என்பவரின் ஆலோசனைப்படியே அன்புச்செழியன் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து வெள்ளைச்சாமியையும் போலிஸார் கைது செய்தனர். தொழிலதிபர் கடத்தப்பட்ட 3 மணி நேரத்திலேயே மீட்ட போலிஸாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!