Tamilnadu
“மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது” : ஐகோர்டில் காவல்துறை விளக்கம்!
சென்னை அண்ணாநகரில் உள்ள (வில்லோ ஸ்பா) மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உரிமையாளர் ஹேமா ஜூவாலினி உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மசாஜ் நிலையத்தின் உரிமையாளர் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, காவல்துறை தொடர்ந்து புலன் விசாரண செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது உயர் நீதிமன்றம்.
ஜனவர் 2021ல் வழக்கிய இடைக்கால உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென காவல்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது.
அப்போது மனுதாரர் தரப்பில் சுதந்திரமாக தொழில் நடத்தும் உரிமையில் காவல்துறை தலையிட முடியாது என்று வாதிட்டார். சோதனையின்போது காவல்துறை உரிய நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் ஏற்கனவே மசாஜ் நிலையங்களில் சோதனை நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று வாதிடப்பட்டது. விபச்சார தடுப்பு சிறப்பு அதிகாரிக்குதான் சோதனை நடத்த உரிமை உள்ளது என்றும் தெரிவித்தனர்.
இதனையடுத்து காவல்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, ஏற்கனவே சோதனைகள் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்குகளின் போது உச்ச நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். சோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய நடைமுறைகளை பின்பற்ற வில்லை என்பதற்காக வழக்கை ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்து இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.
காவல் துறை விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அதனால் குற்றவாளி எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை கீழ் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதாகவும், மேலும் கடந்த 1987ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவில் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகளும் சோதனை நடத்துவதற்கான அதிகாரம் உள்ளது என்றும் விளக்கமளித்தார்.
நியாயமாய் தொழில் நடத்தும் உரிமையில் காவல் துறை தலையிடாது, ஆனால் தவறு நடக்கும் பட்சத்தில், அப்பாவி பெண்கள் பாதிக்கப்படும் போது காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது, உரிய நடவடிக்கை எடுத்து அப்பாவி அபலை பெண்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் என பல உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதாடினார். இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!