Tamilnadu

“சமூக விரோதிகளின் கூடாரமான பா.ஜ.க” : பெண்ணின் வீட்டை அபகரித்ததாக BJP நிர்வாகி மீது புகார்!

தூத்துக்குடியைச் சேர்ந்த பெண் ஒருவர் பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மனைவி, வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தனது வீட்டை அபகரித்துக் கொண்டதாக போலிஸில் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி கேடிசி நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (52). இவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பா.ஜ.க பிரமுகர் மற்றும் அவரது மனைவி மீது மோசடி புகார் அளித்துள்ளார்.

அளித்துள்ள புகார் மனுவில், “கடந்த 2015ஆம் ஆண்டு எனக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டது. இதனால் தூத்துக்குடி குறிஞ்சி நகரைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் மனோகர் நாட்டாமை (49) மற்றும் அவரது மனைவி ஜெயபார்வதி (49) இருவரும் எனக்கு வங்கி கடன் வாங்கி உதவி செய்ய முன்வருவதாக தெரிவித்தனர்.

இதனை நம்பி எனது வீட்டை அவர்களது பெயருக்கு எழுதி கொடுத்தேன். கடனை திருப்பிக் கொடுத்ததும் முடிந்ததும் அவர்கள் வீட்டை என் பெயருக்கே மாற்றி தருவதாக உறுதியளித்தனர்.

மேலும் அதனை வைத்து அவர்கள் நெல்லை அபிஷேகப்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.25 லட்சம் கடன் பெற்று தருவதாக தெரிவித்தனர். இதனால் ரூ.6.50 லட்சம் செலவில் பத்திரப் பதிவு செய்து மாற்றிக் கொடுத்தேன்.

தொடர்ந்து கடந்த 2021 நவம்பர் வரையில் அந்த வங்கிக்கு மாதந்தோறும் 25 ஆயிரம் தவணை கட்டியுள்ளேன். மேலும் அவர்கள் கார் வாங்க பணம் கேட்டபோது ரூ.1.50 லட்சமும், புதிய தொழில் செய்வதற்காக ரூ.6 லட்சமும் கொடுத்தேன்.

இன்றுவரை எதையும் திரும்ப தராமல் மோசடி செய்து, மிரட்டி வருகின்றனர். அவர்களால் எந்த நேரமும் எனக்கு ஆபத்து வரலாம். எனவே இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "உங்களை பா.ஜ.க விட்டாலும் தமிழக முதலமைச்சர் விடமாட்டார்" : EPS, OPS-ஐ எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்!