Tamilnadu
காதலனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம்.. காதலி தற்கொலை.. துக்கம் தாங்காமல் காதலன் செய்த விபரீத செயல்!
விருதுநகர் மாவட்டம், அய்யனாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரும் மகேஸ்வரி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், முனீஸ்வரனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துவைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். இதனை அறிந்த மகேஸ்வரி வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.இது பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில் காதலி தற்கொலை செய்துகொண்ட செய்தி காதலன் முனிஸ்வரனுக்கு தெரியவந்துள்ளது. காதலியின் இறப்புச் செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்த அவரது நண்பர்கள் முனிஸ்வரனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலி இறந்ததால் காதலன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஒன்றிய பாஜகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு ஆதரவாக கூஜா தூக்கும் அதிமுக : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
-
திருவண்ணாமலை மக்களின் நலனுக்காக... ரூ.2,095 கோடியில் திட்டப் பணிகள்... முதலமைச்சர் அசத்தல்!
-
“உழவர்களையும் தொழில்நுட்பம் சென்றடைவதே உண்மையான வளர்ச்சி” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கிறிஸ்தவர்களை குறிவைக்கும் இந்துத்துவ கும்பல்... தமிழக ஆயர் பேரவை தலைவர் கண்டனம் - விவரம்!
-
“முடிஞ்சா...” - எச்.ராஜா, பழனிசாமி, அன்புமணிக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!