Tamilnadu

6 மாதமாக போலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த முகமூடி கொள்ளையன்.. ரோந்து போலிஸாரிடம் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட குளச்சல், கருங்கல், நித்திரவிளை, கொல்லங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம் மையங்கள் மற்றும் நகைக்கடைகள் என பல்வேறு இடங்களில் முகமூடி அணிந்த நபர்கள் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த கொள்ளையர்களைப் பிடிக்க கடந்த ஆறு மாதமாக போலிஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். மேலும் இந்த மர்ம கும்பல் கொள்ளை அடித்துவிட்டு கேரளாவிற்குத் தப்பிச் சென்று விடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அங்கும் தனிப்படை போலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் கொல்லங்கோடு பகுதியில் போலிஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் சந்தேகமடைந்த போலிஸார் காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரணை செய்தபோது. மேலும் அவரது இருசக்கர வாகனத்தில் நகைகள் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தபோது அது திருடி எடுத்து வரப்பட்டது என்பது தெரிந்தது.

இதையடுத்து மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் இந்த நபர்தான் ஏ.டி.எம் மற்றும் நகைக்கடைகளில் முகமூடி அணிந்து கடந்த ஆறு மாதமாகத் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

மேலும், இந்த முகமூடி நபர் வள்ளவிளை பகுதியைச் சேர்ந்த ஷாலு என்பதும் இவரது நண்பர் மிதினுடன் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள மிதினை போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

Also Read: இரவோடு இரவாக தாய் மகன் கொடூரமாக வெட்டிக் கொலை... திண்டுக்கல் அருகே அதிர்ச்சி!