Tamilnadu
காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது.. போலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 24ம் தேதி மாணவி தனியாக நடந்து சென்றபோது, கீழ்விலாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகனான 23 வயதாகும் இளைஞர் திருமலை சிறுமியை வழிமறித்து வம்பிழுத்துள்ளார்.
மேலும், தன்னை காதலிக்கக்கூறி கட்டாயப்படுத்தியுள்ளார். அதோடு இல்லாமல், தன்னைக் காதலிக்கவில்லை என்றால், கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனைவி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைப் பெற்றுகொண்ட போலிஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, சிறுமிக்குக் காதல் தொல்லைக் கொடுத்த இளைஞர் திருமலையைக் கைது செய்து விசாரித்து வருகிறார்.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!