Tamilnadu
“சாவடிச்சுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட” : SSI-யை மிரட்டிய ரவுடியை தூக்கி உள்ளே வைத்த போலிஸ்!
சீர்காழியில் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்தவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டாரக பணியாற்றி வருபவர் அர்ஜுனன் (48). இவர் ஸ்டேஷன் பணியில் இருந்தபோது மணிமாறன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த செந்தில் என்கிற கலைவாணனை விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைவாணன் செல்போனில் தொடர்பு கொண்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை தகாத வார்த்தைகளால் திட்டி தான் ஒரு ரவுடி என்று கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்போது, “உங்களுக்கு பசங்கல்லாம் இருக்கா? தேவையில்லாம ரிஸ்க் எடுக்கவேண்டாம். நல்லதில்ல. புள்ள குட்டிங்களோட இருக்க... ஒழுங்கா பாத்து இரு. சாவடிச்சு போட்டுருவேன் உன்ன.. விடிஞ்சா நீ இருக்கமாட்ட..” என்கிற ரீதியில் மிரட்டியுள்ளார்.
இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதையடுத்து சீர்காழி போலிஸார் கலைவாணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் போலிஸுக்கு மிரட்டல் விடுத்த ரவுடியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கலைவாணன் சீர்காழி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்இன்ஸ்பெக்டர் அசோக், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன் மற்றும் போலிஸார் விரைந்து சென்று மிரட்டல் விடுத்த கலைவாணனை கைது செய்தனர். அவரின் மேல் 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்