Tamilnadu
16 வயது சிறுமியை 6 மாதமாக காதலித்து 4 மாத கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு காப்பு : தாம்பரம் போலிஸ் அதிரடி!
சென்னை பல்லாவரம் அடுத்த குன்றத்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி அரசு பள்ளி ஒன்றில் 11ஆம் வகுப்பு பயின்று வருகின்றார். சிறுமிக்கு அடிக்கடி வயிறு வலி ஏற்படுவதாக கூறியதால் சிறுமியின் பெற்றோர் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்ததில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர் போலிஸார் அந்த தகவலை தாம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலிஸார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சென்று சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.
அதில், குன்றத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (வயது 22) இவர் அதே பகுதியில் உள்ள பூ செடிகள் விற்பனை செய்து கார்டனில் வேலை செய்து வருவதும், அப்போது பள்ளிக்கு செல்லும் போது 16 வயது சிறுமிடம் பேசி பழகி வந்துள்ளனர்.
இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியுள்ளது. 6 மாதமாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 5 மாதத்திற்கு முன்பு சிறுமியை தனது பைக்கில் அழைத்து கொண்டு குன்றத்தூர் பகுதியில் சுற்றியுள்ளான்.
இதில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி 4 மாதம் கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விக்னேஷை கைது செய்த தாம்பரம் அனைத்து மகளிர் போலிஸார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
-
SIR - தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சி : தொல்.திருமாவளவன் MP கண்டனம்!
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!