Tamilnadu
’நீ இல்லாத உலகத்துல நான் வாழமாட்டேன்..': காதலி தற்கொலையால் காதலன் விபரீத முடிவு - அடுத்தடுத்து அதிர்ச்சி!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சிறுகுளத்தைச் சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் கடந்த ஒரு வருடமாக வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்குப் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த பிரவீன்குமாரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனே அவரை மீட்ட உறவினர்கள் விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு, செவிலியராக இருந்த சோலை மீனா என்பவர் இவரது காதல் கதையைக் கேட்டு பிரவீன்குமார் மீது காதல் வயப்பட்டுள்ளார். இதையடுத்து இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். இதனால் பிரவீன்குமார் அடிக்கடி மருத்துவமனைக்கு சோலை மீனாவைச் சந்திக்க வந்துள்ளார்.
இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் சோலை மீனாவை கண்டித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது சக ஊழியர்கள் 'வேலை செய்யும் இடத்தில் இப்படி இருக்கக் கூடாது' என கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் அடுத்தநாள் காலை ஓடும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் காதலியின் மரணச் செய்தியைக் கேட்ட பிரவீன்குமாரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மேலும் தற்கொலைக்கு முன்பு அவர், “நீ இல்லாத உலகில் நான் வாழ மாட்டேன். நானும் உன்னோடு வருகிறேன். இங்கு நாம் ஒன்றாகச் சேர முடியாது. இறந்த பிறகாவது நாம் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வோம். எங்கள் முடிவுக்குத் தனியார் மருத்துவமனையின் ஊழியர்கள்தான் காரணம்” என அவரது வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !