Tamilnadu

“பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது?” : எல்லோருக்கும் புரியும்படி கையேட்டை வெளியிட்ட அரசு!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு அரசின் இந்த பட்ஜெட் இளைஞர் நலன், மக்கள் நல்வாழ்வு, சமூக நலன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன், சிறுபான்மையினர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலன், ஊரக வளர்ச்சித் துறை, மகளிர், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, உயர்கல்வித்துறை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.

இந்த பட்ஜெட் குறித்த குடிமக்களுக்கான கையேட்டையும் வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. அதில் பொதுமக்களுக்கு எளிதாகப் புரியும் வகையில் வரவு-செலவுத் திட்டங்கள் விளக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தின் மொத்த வருவாய், செலவினங்கள், மூலதனச் செலவினங்கள், பற்றாக்குறை என அனைத்தும் இந்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும், ஒரு ரூபாய் எவ்வாறு திரட்டப்படுகிறது என்பது குறித்தும் ஒரு ரூபாய் எவ்வாறு செலவிடப்படுகிறது என்பது குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

Also Read: ‘திராவிட மாடல் வளர்ச்சி’: அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்.. தமிழக பட்ஜெட் முழு விவரம்!