Tamilnadu
சமையல் கேஸ் மானியத்தில் ரூ.19.88 லட்சத்தை சுருட்டிய திருவள்ளூர் அதிமுக நிர்வாகி; மூவருக்கு வலைவீச்சு!
திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டக சாலையின் கீழ் ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத் எரிவாயு சிலிண்டர் மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் கடந்த 2013-2017ஆம் ஆண்டுகளில் பொது மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் மானியத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட துணை பதிவாளர் காத்தவராயன் வணிகவியல் குற்றப்புலனாய்வு போலிஸாருக்கு புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் வணிகவியல் குற்றப் புலனாய்வு போலிஸார் ஊத்துக்கோட்டையில் உள்ள பாரத் கேஸ் சிலிண்டர் விநியோகம் மையத்தில் ஆய்வு மேற்கொண்டதில், 2013 -2017 ஆம் ஆண்டுகளில் பொது மக்கள் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கேஸ் சிலிண்டரில் மானியத்தில் 19 லட்சத்து 88 ஆயிரத்து 294 ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கண்டறிந்தனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட திருவள்ளூர் அதிமுக நகர செயலாளரும் திருவள்ளூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான கந்தசாமி உட்பட நான்கு பேர் மீது வணிகவியல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் அவர்களை தேடிவந்த நிலையில் கேஸ் எரிவாயு மையத்தின் இளநிலை உதவியாளர் எழிலரசனை வணிகவியல் குற்றப்பிரிவு சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள கூட்டுறவு சங்கத் தலைவரும் அதிமுக நிர்வாகி கந்தசாமி, லட்சுமி, ஆனந்தன் ஆகிய 3 பேரையும் வணிகவியல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Also Read
-
‘பெரியார் விருது’ பெறும் கனிமொழி எம்.பி! : தி.மு.கழக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு!
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !