Tamilnadu
நாயின் வயிற்றுக்குள் இருந்த துப்பாக்கி குண்டு.. உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி: பகீர் சம்பவம் என்ன?
சென்னை அடுத்த சித்தலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது வீட்டில் நாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 7ம் தேதி நாயின் உடல் பகுதியில் காயம் இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ஏங்காவது கம்பியில் கிழித்துக் கொண்டிருக்கும் என முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் நாயின் உடலிலிருந்து ரத்தம் நிற்காமல் வெளியே வந்து கொண்டிருந்தது. இதனால் அவர் மருத்துவமனைக்கு நாயை கூட்டிச்சென்றார். அங்கு நாயை பரிசோதனை செய்து ஸ்கேன் எடுத்து பார்த்தபோது துப்பாக்கிக் குண்டு இருந்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் அறுவை சிகிச்சை செய்து நாயின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டை வெளியே எடுத்துள்ளனர். மேலும் நாய் மீது மர்ம நபர்கள் யாரோ துப்பாக்கி சூடு நடத்தியது தெரியவந்துள்ளது. இது குறித்து ஸ்ரீதர் பெரும்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் மீது போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.74.70 கோடியில் சென்னை மாநகராட்சியின் புதிய மன்றக்கூடம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
சென்னையின் கலாச்சாரச் சின்னம் : புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“எந்த பாசிச சக்திகளாலும் ஒன்றும் செய்ய முடியாது” : கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“எங்களுக்கு யாரைக் கண்டும் எந்த பயமும் கிடையாது” : கனிமொழி எம்.பி அதிரடி!
-
“திராவிட மாடலின் சாதனைகள் தொடரும்; உழவர் வாழ்வு செழிக்கும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!