Tamilnadu
“இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே 'நீட்' கேள்வித்தாள்” : அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு!
இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டியுள்ளார்.
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் 'Think Edu 2022' என்ற பெயரில் கருத்தரங்கை சென்னையில் நடத்தியது. இதில் கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ‘இந்தியாவுக்கு நீட் தேவை இல்லை’ என்ற தலைப்பில் பேசினார்.
அப்போது பேசிய அமைச்சர் க.பொன்முடி, “பாடத்திட்டத்தைத் தாண்டி நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணத்தைச் செலவழித்து மாணவர்கள் படித்து வருகின்றனர். நீட் தேர்வின் பெரும்பாலான கேள்வித்தாள்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்தே கேட்கப்படுகின்றன. அதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மாநில பாடத்திட்டத்தைத் தாண்டி இந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் தேர்வுக்கான கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்கள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச பாடத்திட்டத்தை வழங்குகிறோம் எனக் கூறி மாநிலத்தின் கல்வி உரிமையைப் பறிக்கின்றனர். இது முழுமையாக ஒத்துவராத ஒன்று. அடிப்படை கல்வியில் இருந்தே நுழைவுத்தேர்வு கொண்டு வருவது சரியானது அல்ல.
மாநில அளவிலேயே நடைபெறும் நுழைவுத்தேர்வைக் கூட நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் நீட்டுக்கு எதிராகத் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
இந்தியா என்பது வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு. பல கலாச்சாரம் கொண்ட நாடுகளுக்கு ஒரே பாடத்திட்டம் சரியாக இருக்காது. நாடு முழுவதும் ஒரே கல்வி என்பது சரிப்பட்டு வராது.” எனப் பேசினார்.
Also Read
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!