Tamilnadu
அரை பவுன் நகைக்காக பாட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற சிறுவர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்!
திருவண்ணாமலை மாவட்டம், ஆரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுசீலா. கணவனை இழந்த மூதாட்டியான இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட நிலையில் மூதாட்டியின் உடலை போலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.
இந்தக் கொலை குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சம்பவத்தன்று மூதாட்டியான சுசீலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு இருந்த மூன்று சிறுவர்கள் திடீரென மூதாட்டியைத் தாக்கி அவர் காதில் அணிந்திருந்த கம்மலை திருட முயற்சித்துள்ளனர். இதற்கு மூதாட்டி பிடிகொடுக்காமல் அவர்களைத் தாக்க முற்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சிறுவர்கள் அங்கிருந்த கட்டையால் மூதாட்டியின் தலையில் அடித்துக் கொலை செய்துவிட்டு காதில் அணிந்திருந்த அரை பவுன் தங்க கம்மலை திருடிச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களை போலிஸார் கைது செய்தனர். சிறுவர்கள் மூன்று பேருக்கும் 17 வயதே ஆவதால் அவர்களை சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளனர்.
அரை பவுன் நகைக்காக மூதாட்டியைச் சிறுவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!