Tamilnadu
“Forex tradeல பணம் சம்பாதிக்கலாம்” : யூட்யூப் சேனல் நடத்தி ரூ.300 கோடி மோசடி - கோவையில் அதிர்ச்சி!
ஃபாரெக்ஸ் ட்ரேட் செய்வதாகக் கூறி 300 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்த நபரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்தவர் விமல்குமார். இவர் 'மிஸ்டர் மணி' என்ற பெயரில் யூட்யூப் சேனல் நடத்தி வந்தார். தனது யூட்யூப் சேனலில் 'லைவ்' செய்வதற்காக அவ்வப்போது வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தவர், அங்குள்ள பொதுமக்களிடம், 'ஃபாரெக்ஸ் டிரேடிங்' எனப்படும் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது சேனலிலும் பதிவிட்டு வந்துள்ளார். இதற்காக, மாவட்டம்தோறும் அலுவலகம் அமைத்து, ஊழியர்களை நியமித்து அவர்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து பணத்தை திரட்டியுள்ளார்.
அவரது பேச்சை நம்பி தமிழ்நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி உள்ளனர். இந்த வகையில், 300 கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்டியவர், முதலீடு செய்தவர்களுக்கு வட்டி கொடுக்காமல் இழுத்தடித்துள்ளார்.
பின்னர், மாவட்ட அலுவலகங்கள் அனைத்தையும் மூடிவிட்டு, மொபைல் போனையும் ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். பணத்தை இழந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், நேற்று கோவை ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர்.
பணத்தை இழ்ந்தவர்கள், மோசடி செய்த விமல்குமாரை கைது செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். ஃபாரெக்ஸ் ட்ரேட் செய்வதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!