Tamilnadu
கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட அக்கா, தம்பி: 5 நாட்களுக்கு பிறகு உடல் மீட்பு- நடந்தது என்ன?
விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள வீட்டில் பிரமிளா மற்றும் சுசீந்திரன் ஆகியோர் வசித்து வந்தனர். சகோதரன், சகோதரிகளான இருவரும் துணை நடிகை ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், அவர்கள் வீட்டு பூட்டிய இருந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது இருவரும் தூக்கில் தொங்கிய படி இருந்தனர்.
பிறகு அழுகிய நிலையிலிருந்த உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக போலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை செய்ததில் இருவரும் 5 நாட்களுக்கு முன்பே தற்கொலை செய்து கொண்டதால் உடல் அழுகியிருப்பது தெரியவந்தது.
மேலும் வீட்டில் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று போலிஸாருக்கு கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை. வறுமை காரணமாகவே தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்காள், தம்பி தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?
-
அதானிக்கு தாரை வார்க்கப்பட்ட புதுச்சேரி மின்துறை - இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு !