Tamilnadu
“தீக்குளித்த Livin காதல் ஜோடி.. பெண் பலி - வாலிபருக்குத் தீவிர சிகிச்சை” : போலிஸ் விசாரணை - நடந்தது என்ன?
சென்னை, சூளையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் சந்தீப் ஜெயின் மற்றும் இளைச்சி ஆகிய இருவர் திருணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று திடீரென இரண்டு பேரும் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளனர்.
இவர்கள் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர் அதிர்ச்சியடைந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் தீக்காயங்களுடன் இருந்துள்ளனர். பின்னர், இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வந்த போலிஸார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது இளைச்சி உயிரிழந்தது தெரியவந்தது.மேலும் சந்தீப் ஜெயனுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து இவர்கள் ஏன் தீ வைத்துக் கொண்டனர் என்பது குறித்தும் போலிஸார் விசாரித்து வருகின்றனர். Livin காதல் ஜோடி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”எங்களுக்கு தமிழ் இலக்கண வகுப்பு எடுக்காதீர்கள்” : பழனிசாமிக்கு பதிலடி தந்த அமைச்சர் எ.வ.வேலு!
-
முதலமைச்சர் கோப்பை : ‘பூப்பந்து விளையாட்டு’ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!
-
”பாலம் சிறப்பானது ; பெயர் அதனினும் சிறப்பானது” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
"அரசு அலுவலர்கள் சிறப்பாக செயல்பட்டால்தான் அரசின் திட்டங்கள் மக்களை சேரும்" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
“ஏன்? எதற்கு? எப்படி?” என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் போட்டிகள்... யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!