Tamilnadu
குட்கா கடத்திய பா.ஜ.க நிர்வாகி கைது... போலிஸாரிடம் சிக்கியது எப்படி?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு போலிஸார் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தைச் சோதனை செய்தபோது 3.8 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள் இருந்தை கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது பா.ஜ.க கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் இருந்த குட்கா பொருளைப் பறிமுதல் செய்தனர். பா.ஜ.க நிர்வாகி தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!