Tamilnadu
நடத்தையில் சந்தேகம்.. பெண்ணை கத்தியால் வெட்டிய வாலிபர் கைது: கிருஷ்ணகிரி அருகே பகீர் சம்பவம்!
கிருஷ்ணகிரி மாவட்டம், சோழார அள்ளியைச் சேர்ந்தவர் பார்வதி. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதேபகுதியைச் சேர்ந்த மனைவியை இழந்த முருகன் என்பவருடன் இவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகன் இல்லாத நேரத்தில் வேறு சில ஆண்டுகள் வீட்டிற்கு வந்து செல்வதாகச் சிலர் அவரிடம் கூறியுள்ளனர்.
இதனால் பார்வதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு இது குறித்துக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்து கத்தியை எடுத்து முருகன், பார்வதியை அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் பார்வதியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வெளியான அதிர்ச்சி காணொளி.. தவெக அரசின் அலட்சியம்.. நோயாளிகளே குளுக்கோஸ் பாட்டிலை பிடித்து சிகிச்சை!
-
தொடரும் கொலைகள் : “குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டி...” - த.வெ.க.வை விமர்சித்த உதயநிதி !
-
“பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூகநீதி உரிமையை உறுதிசெய்ய வேண்டும்!” : மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
சென்னையில் நள்ளிரவில் பயங்கரம்.. தவெக நிர்வாகி ஓட ஓட வெட்டி கொடூர கொலை.. பின்னணி என்ன?
-
Part Time Job : விளம்பர பதாகை வைத்த நந்தனம் கல்லூரி மாணவருக்கு நேரந்த சோகம்!