Tamilnadu
விளைநிலத்தில் ‘களை’ எடுக்கும் போது நடந்த விபரீதம் - உழவு இயந்திரத்தில் சிக்கிய விவசாயி கொடூர மரணம்!
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைக்கண்ணு (வயது 65). இவர் மணியாங்குறிச்சி சாலையோரத்தில் உள்ள வயலில் உழவு இயந்திரத்தை கொண்டு உழுது கொண்டிருந்தார்.
அப்பொழுது எந்திரத்தில் (ரொட்டேட்டர்) சில தாவரங்கள் சிக்கிக்கொண்டன. அதனை சுத்தம் செய்ய அவர் கீழே குனிந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த பனியன் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டது.
இதனால் சுற்றிய இயந்திரத்தில் துரைக்கண்ணு சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலிஸார் அங்கு வந்து, துரைக்கண்ணுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“சீரழியும் சிறைத்துறை... கண்டுகொள்ளாத நிர்மல்குமார்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“சபரி வர்மன் காவல் மரணம்.. கொடூரமான துறையாக முதல்வர் விஜயின் உள்துறை உள்ளது” : கீதா ஜீவன் காட்டம்!
-
போட்டோவுக்கு யார் போஸ் கொடுப்பது.. காமராஜர் பிறந்தநாள் விழாவில் மோதிக்கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்!
-
கல்விக்கண் திறந்த கர்மவீரரின் புகழ் என்றும் நிலைத்திருக்கும் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் புகழ்வணக்கம்!
-
த.வெ.க அரசின் மாற்றம் இதுதானா? : லாக்கப் படுகொலைக்கு பிரேமலதா விஜயகாந்த் எம்.எல்.ஏ கண்டனம்!