Tamilnadu

சாலையோரம் நின்றிருந்த இளைஞரை குத்திக் கிழித்த காட்டெருமை; குன்னூர் மலைப்பாதையில் பரபரப்பு!

மலை மாவட்டமான நீலகிரியின் குன்னூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ளது கன்னி மாரியம்மன் கோவில் தெரு.

இந்த தெருவில் நேற்று முன் தினம் மாலை சுமார் 5 மணி அளவில் காட்டெருமை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி நகர்வலம் வந்துள்ளது.

அப்போது மலைப்பாதையான கன்னி மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள குடியிருப்பு சாலையில் நடந்து சென்ற போது சிவா என்ற இளைஞர் காட்டெருமை வரும் பாதையில் நின்று கொண்டிருந்தார்.

அவ்வாறு காட்டெருமை வழியை மறித்து நின்று கொண்டிருந்த இளைஞர் சிவாவை தாக்கியதில் வயிற்று மற்றும் முதுகு பகுதிகளில் காயங்களுடன் உயிர் தப்பினர்.

அவருக்கு குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமை இளைஞரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

முன்னதாக வன விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வலம் வரும் போது பொதுமக்கள் எவரும் வெளியே சுற்றித்திரிய வேண்டாம் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: பைக் சைலென்சரை வைத்து மாணவர்கள் அட்டகாசம்; உருத்தெரியாமல் அழித்த உடுப்பி போலிஸ்!