Tamilnadu
அணிந்திருந்த நகைகளை பலவந்தமாக பறித்த ஹைவே கொள்ளையர்கள்; தீரன் பட பாணியில் திகில் சம்பவம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள கடமலைபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த 12ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தபோது முகமூடி அணிந்து இருந்த அடையாளம் தெரியாத 9 மர்ம நபர்கள் ஜெகநாதன் வீட்டிற்குள் புகுந்து அவரையும் அவரது குடும்பத்தினரையும் கத்தியை காட்டி மிரட்டியதோடு அவர்கள் அனைவரையும் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து ஜெகநாதன் உடனடியாக அச்சரப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் பரத் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து 30க்கும் மேற்பட்டோர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் அச்சரபாக்கம் பகுதியிலேயே சம்பந்தப்பட்ட கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சம்பவ இடத்தில் போலீசார் அங்கு வாகன சோதனை மேற்கொண்டனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 1.கேசவன் 2.பிரபு 3.சசிகுமார் 4.முகமது அப்துல்லா 5.அருள்முருகன் 6.ராஜா கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 7.சதீஷ்குமார் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் ஆகிய 8 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஒப்புக்கொண்டனர். மேலும் விசாரணையில் அவர்கள் மீது கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலும் தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து போலீசார் எட்டு பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொள்ளை அடிக்கப்பட்ட 12 சவரன் தங்க நகை 250 கிராம் வெள்ளி
10 செல்போன்கள் கத்தி ஆயுதங்கள் இருசக்கர வாகனம் சொகுசு கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!