Tamilnadu
கணவரின் தம்பி மனைவி மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய பெண்... திருவாரூரில் கொடூரம்!
திருவாரூர் மாவட்டம், வேம்பனூர் மெயின் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி அருள்செல்வி. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை உள்ளது.
இவர்களது பக்கத்து வீட்டில் செந்தில்குமாரின் சகோதர் குடும்பம் வசித்து வருகிறது. இந்த இரண்டு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதனால் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று மாமானருடன் பேசிக் கொண்டிருந்த அருள்மொழி மீது, கொழுந்தனார் மனைவி பத்மாவதி கொதிக்கும் வெந்நீரை எடுத்து ஊற்றியுள்ளார். மேலும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அருள்மொழியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து பத்மாவதி மற்றும் அவரது கணவரை கைது செய்தனர்.
Also Read
-
சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள்: “இதிலும் வாய்மூடி இருக்காமல்..” -விஜய் அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!