Tamilnadu
YOUTUBE பார்த்து வெடிமருந்து தயாரித்த இளைஞர்கள் கைது - விசாரணையில் ‘திடுக்கிடும்’ தகவல் - நடந்தது என்ன?
தேனி மாவட்டத்திற்குட்பட்ட காப்புக்காடு, சந்தமலைப் பகுதியில் வனக்காவலர்கள் வழக்கம்போல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் சாக்கு மூட்டை ஒன்றை சுமந்து கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
பின்னர், வானக்காலவர்கள் வந்ததை அறிந்த அவர்கள் உடனே அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அவர்களைப் பின்தொடர்ந்து சென்று வனக்காவலர்கள் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது வேட்டையாடப்பட்ட காட்டுப்பன்றி மற்றும் வெடிமருந்து இருந்தைக் கண்டு போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்களிடம் விசாரணை செய்தனர்.
இதில் பாலக்கோம்பை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், வேல்சாமி ஆகியோர் என்பது தெரிந்தது. அதேபோல் காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக யூடியூப் பார்த்து இவர்கள் வெடிமருந்து தயாரித்துள்ளனர்.
இப்படித் தயாரிக்கப்பட்ட வெடிமருந்தை எடுத்து வந்து காட்டுப்பன்றிகளை வெடிவைத்துக் கொன்றுவிட்டு, அதை அடுத்துச் செல்லும்போதுதான் போலிஸாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!