Tamilnadu

ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி - குடியரசு தின விழா அணிவகுப்பில் அசத்திய ஷிவாங்கி சிங் !

டெல்லியில் நடைபெற்ற 73வது குடியரசு தின விழாவில், விமானப்படை அணிவகுப்பில் இடம் பெற்றிருந்த ரஃபேல் போர் விமானத்தை இயக்கிய பெண் விமானி ஷிவாங்கி சிங்-கிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 59,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்ட ரஃபேல் போர் விமானங்களை அணிவகுப்பில் இடம் பெறவைத்தது இந்திய விமானப்படை. அதிநவீன வசதிக்கொண்ட ரஃபேல் போர் விமானத்தை முதலில் இயக்கிய பெண் விமானி என்ற பெருமையை ஷிவாங்கி சிங் பெற்றுள்ளார்.

26 வயதாகும் ஷிவாங்கி சிங் உ.பி மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர். பள்ளி பருவமுதலே விமானியாக வேண்டும் என்ற ஆசையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்த பின்னர் 2017ம் ஆண்டு ஷார்ட் சர்வீஸ் கமிஷன் என்றும் பைலட் நுழைவுத்திட்டத்தின் மூலம் இந்திய விமானப்படையில் இணைந்தார்.

தொடர்ச்சியாக இருந்த ஈடுபட்டால், ஒரியன்டேஷன் கோர்ஸ், ஏர் ஃபோர்ஸ் அகாடெமியில் பிலாடஸ் பி.சி எம்.எம்.கே விமான பயிற்சி என பலவற்றைக் கண்டுக்கொண்டார். பிறகு 1971-ம் ஆண்டில் நடந்த போரில் பங்கேற்று பெரும் பங்கு வகித்த எம்.ஐ.ஜி போர் விமானத்தை இயக்கி தனது சாதனையை உச்சத்திற்கு எடுத்துச் சென்றார் ஷிவாங்கி சிங்.

இதன்பின்னர் உலக நாடுகளுக்கு பெரும் போட்டியாக விளக்கும் ரஃபேல் போர் விமானத்தை இயக்கி சாதனை பெண் விமானி என தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துள்ளார் ஷிவாங்கி சிங். முன்னதாக 2019-ம் ஆண்டு பாகிஸ்தானால் கடத்தப்பட்ட அபிநந்தன் வர்தமானுடன் சக பெண் பைலட்டாக பணியற்றிய ஷிவாங்கி சிங், தற்போது, பஞ்சாப் அம்பலாவில் உள்ள இந்திய விமானப் படையின் கோல்டன் அரோஸ் படைப்பிரிவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அதிநவீன வசதிக்கொண்ட ரஃபேல் போர் விமானத்தை முதலில் இயக்கிய பெண் விமானி என்ற பெருமையை ஷிவாங்கி சிங் பெற்றுள்ளார். மேலும் ஷிவாங்கி சிங்-கிற்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read: “நடிகர் விஜயின் சொகுசுகாருக்கு அதிகப்படியான அபராதம்.. எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்” : ஐகோர்ட் !