Tamilnadu
குழந்தையை கடித்துக் குதறிய நாய்கள்..60 தையலுடன் மருத்துவமனையில் சிகிச்சை: தாய் வெளியிட்ட உருக்கமான வீடியோ
கடலூர் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தமிழரசி. இந்த தம்பதிக்கு இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு குழந்தை தனது தாத்தாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்குச் சென்றுள்ளது.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்துக் கொண்ட தெருநாய்கள், குழந்தையை கடித்துக் குதறியுள்ளன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி குழழ்ந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு 60 தையலுடன் குழந்தை சிகிச்சைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் குழந்தைகளின் தாய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அதில்"தனது குழந்தைக்கு ஏற்பட்டதைப் போன்று வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்ளை பிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் - தி.மு.க. சார்பில் களம் இறங்கும் சேது : மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
-
“இதுபோன்ற ‘உடல்மொழிகள்’ கண்ணியமான அணுகுமுறை இல்லை!” : முதல்வருக்கு வி.சி.க தலைவர் திருமாவளவன் கண்டனம்!
-
“சட்டமன்ற உரிமை என்பது அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமல்ல!” : தி.மு.க கொறடா எ.வ.வேலு கண்டனம்!
-
தனியார் பல்கலை. திருத்த மசோதா நிறைவேற்றம்.. சமூகநீதியை சீர்குலைக்கும் தவெக அரசு - கோவி. செழியன் கண்டனம்!
-
அருவெறுப்பான உரை... : முதலமைச்சர் விஜய் பேச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த தி.மு.க!