Tamilnadu
தஞ்சையில் இருந்து தப்பிய குற்றவாளி.. டோல்கேட்டில் பிடிக்க முயன்ற போலிஸ் மீது காரை ஏற்றிய கும்பல்!
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு, தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில் குறிப்பிட்ட "TN 20AE 4779" என்ற பதிவு எண் கொண்ட ஸ்கார்பியோ காரில் குற்றவாளி ஒருவர் தப்பி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டம் துவாக்குடி சுங்கச்சாவடியில் அந்த குறிப்பிட்ட காரை மறித்து, அதில் வரும் நபரை கைது செய்ய துவாக்குடி காவல்துறையினருக்கு திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நபரது புகைப்படமும் அனுப்பப்பட்டது.
இதனடிப்படையில் துவாக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் உள்ளிட்ட போலிஸார் சுங்கச்சாவடியில் அந்த காரை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த கார் தஞ்சையில் இருந்து திருச்சி நோக்கி வேகமாக வந்து சுங்கச்சாவடியில் நின்றது. சுங்கச்சாவடியில் வழக்கமாக பயன்படுத்தும் தடுப்பு மூலம் கார் தடுத்து நிறுத்தப்பட்டது.
அப்போது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் கார் அருகில் சென்று விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென அந்த கார் வேகமாக தடுப்பை இடித்துத் தள்ளிவிட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுரேஷ் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அந்த வாகனத்தைப் பிடிக்க திருச்சி மாநகர காவல் துறையினருக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் அந்த கார் இடையிலேயே வேறு திசையில் திரும்பிச் சென்றுவிட்டது. சுங்கச்சாவடி தடுப்பு பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ சுரேஷ் மீது கார் மோதி விட்டு நிற்காமல் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. இதனிடையே எஸ்.எஸ்.ஐ சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் துவாக்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காரை தேடி வருகின்றனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!