Tamilnadu
உள்ளாடைக்குள் கட்டுக்கட்டாக ஃபாரின் கரன்சி.. விமானத்தில் ஏறும் போது சிக்கிய பயணிகள் - சுங்கத்துறை அதிரடி!
சென்னையிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு இலங்கை செல்லும் தனியாா் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சோ்ந்த 7 பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணிகளை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினா். இதையடுத்து பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று ஆடைகளில் சோதனையிட்டனா்.
அவா்களுடைய உள்ளாடைகளுக்குள் அமெரிக்க டாலா், சவுதி ரியால் போன்ற வெளிநாட்டு கரண்சிகள் கட்டுக்கட்டாக மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.அவா்கள் 7 பேரிடமிருந்து ரூ.42.18 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனா்.அதோடு அவா்களின் பயணங்களை ரத்து செய்து, 7 பேரையும் கைது செய்தனா்.
இந்நிலையில் இன்று காலை 5.30 மணிக்கு சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.அதில் பயணிக்க வந்த பயணிகளை சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.
அப்போது சென்னையை சோ்ந்த ஒரு ஆண் பயணியை சந்தேகத்தில் சோதனையிட்டனா். அவருடைய சூட்கேஸ்சில் மறைத்து வைத்திருந்த ரூ.14.45 மதிப்புடைய சவுதி ரியால் பணத்தை கைப்பற்றினா்.அதோடு பயணியின் பயணத்தை ரத்து செய்து,கைது செய்தனா்.
சென்னை சா்வதேச விமானநிலையத்தில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடத்திய சோதனைகளில் ரூ.56.63 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு,வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற 8 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து,விசாரணை நடத்துகின்றனா்.
Also Read
-
“விஜயின் முகத்திரை கொஞ்சம் கொஞ்சமாக விரைவில் கிழியும்” : முரசொலி தலையங்கம்!
-
“இவர்களெல்லாமா அமைச்சர்கள்.. இனி அடுத்த தேர்தலில் விட மாட்டோம்..” - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சூளுரை!
-
“இதையெல்லாம் செய்யணும்.. இல்லைனா பட்ஜெட் கூட்டத்தின்போது...” - தவெக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!
-
தூய்மை பணியாளரை இழிவு படுத்தும் தவெக... கண்டுகொள்ளாத காவல்துறை.. தொடரும் கொடுமைகள்!
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!