Tamilnadu

“அரசு ஊழியர்களுக்காக கலைஞர் அரசு செயல்படுத்திய திட்டங்கள் என்னென்ன தெரியுமா..?” - பட்டியலிட்ட முதல்வர்!

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அரசு ஊழியர்கள்தான் அரசாங்கம் - அரசு ஊழியர்கள் இல்லை என்றால் அரசாங்கம் இல்லை” எனப் பேசினார்.

தொடர்ந்து, அரசு ஊழியர்களின் நலனுக்காக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்களில் சிலவற்றைப் பட்டியலிட்டுக் காட்டினார்.

முத்தமிழறிஞர் கலைஞரின் திட்டங்கள் :

அரசு அலுவலர்கள் நடத்தை பற்றிய ரகசியக் குறிப்பேட்டை நீக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்!

அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்!

கருணைக் கொடையை இந்தியாவிலேயே வழங்கிய முதல் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்!

அரசு ஊழியர்கள் பணிக்காலத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கியதும் கழக அரசுதான்!

ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெறக்கூடிய திட்டத்தை அமல்படுத்தியர் தலைவர் கலைஞர் அவர்கள்!

திருமணக் கடன், வாகனக் கடன், வீடுகட்டக் கடன் ஆகியவை வழங்கியவர் கலைஞர் அவர்கள் தான்! மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்தித் தந்தவரும் கலைஞர் அவர்கள்தான்.

6 மாதத்துக்கு ஒரு முறை ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு பஞ்சப்படி உயர்த்தும்போதெல்லாம் மாநில அரசு ஊழியர்க்கும் வழங்கியவர் தலைவர் கலைஞர்!

ஒளிவுமறைவற்ற கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல்களை வழங்கியது தி.மு.கழக ஆட்சி காலத்தில்தான்!

அரசுப்பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்தியது கழக அரசு!

10 ஆயிரம் சாலைப் பணியாளர்களை நியமித்ததும், 7 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களை வேலையில் அமர்த்தியதும் கழக அரசுதான்.

பண்டிகை முன்பணத்துக்கு வட்டியை நீக்கிய அரசு கழக அரசு!

2 லட்சம் சத்துணவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிய ஆட்சி கழக ஆட்சி!

ஓய்வுக்காலப் பணிக்கொடை உச்சவரம்பை உயர்த்திய அரசு கழக அரசு!

தமிழாசிரியர் பணியிடப் பாகுபாடு நீக்கப்பட்டது. புலவர் பட்டம் பி.லிட். பட்டம் ஆக்கப்பட்டது.

நல்லாசிரியர் விருது டாக்டர் ராதாகிஷ்ணன் விருது ஆனது.

ஒன்றிய அரசுக்கு இணையான சம்பள விகிதங்கள் மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியருக்குத் தரப்பட்டன.

Also Read: “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனை திட்டங்களில் மற்றொரு மணிமகுடம்” : தினகரன் தலையங்கம் பாராட்டு!