Tamilnadu

நடுக் கடலில் மீனவருக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.1 லட்சம் விலைபோன மீன்கள் : நடந்தது என்ன?

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீனவர்கள் 100க்கும் மேற்பட்ட மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்க நேற்று முன்தினம் சென்றனர். பின்னர் மீனவர்கள் கடலில் மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரைக்குத் திருப்பினர். இவர்கள் வருகையை அறிந்து மீன் வியாபாரிகள் இவர்கள் வருகைக்காகக் காத்திருந்தனர்.

கரைதிரும்பிய மீனவர்களின் படகில் பாறை, கட்டா, விலைமீன், கடல்நண்டு, திருக்கை உள்ளிட்ட மீன்கள் இருந்தன. ஒரு மீனவரின் படகில் விலை உயர்ந்த 'லக்கி மீன்' என்று அழைக்கப்படும் 'கூரல் மீன்' இருந்தை பார்த்து வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

பிறகு இந்த மீனை வியாபாரிகள் ஒருவரை ஒருவார் போட்டிப்போட்டு ஏலம் எடுக்க முயன்றனர். பின்னர் மீனவரின் படகிலிருந்து 15 கூரல் மீன்களை ரூ.1 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கிச் சென்றனர். அதிக தொகைக்கு மீன்கள் விலைபோனதால் அந்த மீனவர் மகிழ்ச்சியடைந்தார்.

Also Read: “தடைகாலம் முடிந்து கடலுக்குச் சென்ற மீனவருக்கு அடித்த ஜாக்பாட்” : நடுக்கடலில் நடந்தது என்ன ?