Tamilnadu
”தனியா போறியே எதாவது ஆபத்துனா 181க்கு கால் பன்னு” - மீம்ஸ் போட்டு விழிப்புணர்வு; அசத்தும் தஞ்சை காவல்துறை
குற்றச்சம்பவங்களை தடுக்கவும், குற்றச்சம்பவங்களில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்காக பல்வேறு வகைகளிலும் போலிஸார் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவ்வகையில் மக்களிடையே எளிதில் சென்றடையும் தற்கால ஆயுதமான சமூக வலைதளங்களை கையில் எடுத்துள்ளது காவல்துறை.
அதில் வீடியோக்கள், அறிவிப்புகள், மீம்ஸ்கள் என அனைத்தையும் நெட்டிசன்களுக்கு இணையாக பதிவுகளை இட்டு மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையினர் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள், தவறான அழைப்புகளை மேற்கொண்டு பணம் பறித்தல், ஆபாசமாக பேசுதல், வேலை மோசடி போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள இலவச அழைப்பு எண்ணை அறிமுகம் செய்துள்ளதோடு அதனை மீம்ஸ் வாயிலாக மக்களிடம் சென்றடையச் செய்கின்றனர்.
அண்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் டாக்டர் பட template-ஐ வைத்து விழிப்புணர்வு மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். அந்த மீம்ஸ்களுக்கு இணையவாசிகளிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதுபோக அந்த மீம்ஸ் பதிவுகளில் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள் குறித்தும் புகார்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதன் மூலம் மக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்பெற்று வருவதற்கு சான்றாக உள்ளது.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?