Tamilnadu

கெமிக்கல் நிறுவனத்தில் வாயு கசிவு.. ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர் நேரில் ஆய்வு !

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் தாமோதரன் என்பவர் ஸ்ரீதர் கெமிக்கல் என்ற குடோன் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் 900 கிலோ குளோரின் கேஸ் மிகப்பெரிய கலனில் சேமிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலைக்கு தேவையான அளவில் சிறிய கலன்களுக்கு மாற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று, வழக்கம் போல் பெரிய கலனிலிருந்து சிறிய கலனுக்கு கேஸ் மாற்றும் போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தால் குளோரின் கேஸ் கசியத் தொடங்கியது. கேஸ் மேலும் பரவத் தொடங்கியதையடுத்து அருகில் இருந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள் மயக்கமடைத்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவக்குழுவினர் மயக்கமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈரோடு, சித்தோடு, பவானி போன்ற பகுதிகளிலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புதுறையினர் பாதுகாப்பு கவச உடை அணிந்து தொழிற்சாலைக்குள் சென்று கேஸின் வ வீரியத்தை குறைத்தனர்.

இந்த விபத்தில் கெமிக்கல் நிறுவன உரிமையாளர் தாமேதரன் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் மேலும் 12 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தை தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துச்சாமி பார்வையிட்டார். அப்பகுதி பொதுமக்களின் அச்சத்தை போக்கவும் தேவையான வசதிகளை செய்து தர அதிகாரிகளை கேட்டு கொண்டார். ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் வாயு கசிவு ஏற்பட்ட இடத்தை அமைச்சர் சு.முத்துச்சாமி பார்வையிட்டார்

Also Read: "முடிவெடுப்பதில் தாமதம்.. அரசின் கட்டமைப்பு சரியில்லை": நிதின் கட்கரி பேச்சால் பா.ஜ.க அதிருப்தி!